தேய்பிறை அஷ்டமி வழிபாடு ஆபத்திலிருந்து காக்கும் வழிபாடு ஆகும்.
அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு. சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சம்.
ஸ்ரீ மஹா கால பைரவர் காக்கும் கடவுள். அவரை நினைத்து வணங்கும் பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.
மஹா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு யோகங்களையும் கலைகளையும் வழங்கும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குகிறார்கள்.
அஷ்ட பைரவரை வணங்கினால் தொல்லைகள் அகலும் மற்றவர் செய்த ஏவல், பில்லி, சூனியம் போன்ற அபிசார தோஷங்கள் விலகும், மருத்துவர்களை தோல்வியுறச் செய்யும் கர்ம வியாதிகளில் இருந்து விடுபடும், அஷ்ட தரித்திரம் நம்மை விட்டு விலகி பெருஞ்செல்வம் சேர்ந்திடும், தங்கம் நம்மோடு எந்நாளும் தங்கியிருக்கும், வம்பு வழக்குகளில் வெற்றி கிட்டும், பொறாமை, கண்திருஷ்டி அகன்று சுகம் பெற்றிடலாம், தொட்டது துலங்கும், எதிரிகளும், தடைகளும் மறைந்து எதிலும் வெற்றி பெற்றிட வாய்ப்பு கிடைக்கும்,