History
சென்னை வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் 7 கிமி தூரத்தில் உள்ள உள்ள கண்டிகையை அடுத்த நல்லம்பாக்கத்தில் 100 அடி மலை உச்சியில் உள்ள சிவலிங்கத்தை வழிபடுவதற்காக பக்தர்கள் திரளுகின்றனர்.
Devotees gather to pay homage to the Shivalingam at the top of a 100-foot hill at Nallambakkam, next to Kandikai, 7 km from Kalambakkam Road in Vandalur, Chenna
வடிவானந்த சித்தர்
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லம்பாக்கம் ஊராட்சியில், நல்லம்பாக்கம், கண்டிகை, மல்ரோசாபுரம், காந்திநகர், அம்பேத்கர்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 12ம் நூற்றாண்டில் நல்லம்பாக்கம் கிராமத்தில் தேவர்கள், சித்தர்கள், முனிவர்கள் இரவு நேரத்தில் வழிபட்டு வந்தனர். அவர்களுடன் சித்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அப்போது அவருக்கு சிவன் தரிசனமாகி கூறியதின்பேரில் அம்பேத்கர்நகரில் உள்ள குன்றில் சுமார் 300 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை எடுத்து அருகில் உள்ள 100அடி மலை உச்சியில் வைத்து சொர்ணலிங்கத்தை வழிபட்டு வந்தார். இங்கு கடந்த 1930ம் ஆண்டிலிருந்து பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். இங்கு மேற்கூரை இல்லாமல் ஆகாயத்தை பார்த்தபடி வெளியரங்கமாய் உள்ள சொர்ணலிங்கத்தின் மீது சூரியன் மற்றும் சந்திரனின் ஒளி நேரடியாக படுவதால் எத்தனையோ முறை மேற்கூரை அமைத்தும், அவை காற்றில் அடித்து கொண்டுபோய் விடுகிறது. இதனால் தடுப்பு போடவும் முடியவில்லை. மேலும் சிவலிங்கத்தை வழிபட மலை மீது வருபவர்கள் சிவனின் அனுமதி இல்லாமல் எளிதில் வரமுடியாது. அவர் அனுமதிப்பவர்கள் மட்டும் தான் வந்து அவரை வழிபட முடியும். திருமணம் ஆகாதவர்கள், குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து சிவனை வழிபட்டால் ஒரே மாதத்தில் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும், இதற்காக அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, பிரதோஷம் உள்ளிட்ட தினங்களில் இங்கு அதிக அளவில் பக்தர்களும், பொதுமக்களும் குவிகின்றனர். கேட்கும் வரத்தை பக்தர்களுக்கு சிவன் அருள செய்கிறார். மேலும் மலை அருகில் உள்ள இரண்டு பக்கத்திலும் தாமரை நிறைந்த குளம் உள்ளது. இதில் உள்ள தண்ணீரை குடித்தால் நோய்கள் தீரும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவாச்சாரியர்களும் இங்கு வந்து வழிபட்டுவிட்டு செல்வது வழக்கம்.